Home உலகம் டென்மார்க்கில் தீவிரவாத தாக்குதல் – சார்லி ஹெப்டோ சம்பவம் தொடர்கிறதா?

டென்மார்க்கில் தீவிரவாத தாக்குதல் – சார்லி ஹெப்டோ சம்பவம் தொடர்கிறதா?

504
0
SHARE
Ad

france attackகோபன்ஹைகன், பிப்ரவரி 16 – பிரான்ஸ் தலைநகர் பாரிசில், சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் கடந்த மாதம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இஸ்லாம் பற்றி சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

12 பேர் பலியான இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது போன்ற தாக்குதல் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது.

france_attack_carகோபன்ஹேகனில் உள்ள கலாசார மையம் ஒன்றில் பேச்சு சுதந்திரம் குறித்த விவாத மேடை நடைபெற்றது. இதில் சுவீடன் பத்திரிகையின் காட்டூனிஸ்ட் லார்ஸ் வில்க்ஸ் மற்றும் டென்மார்க்கிற்கான பிரான்ஸ் தூதர் பிரான் கோயிஸ் ஷி மேரே ஆகியோர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

அப்போது அங்கு வந்த மர்ம நபர் கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். அந்த தாக்குதலில் 40 வயது மதிக்கதக்க ஒருவர் பலியானார். 3 காவல் துறை அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் கார்ட்டூனிஸ்ட் லார்ஸ் வில்க்ஸ்சை குறிவைத்து நடந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வரைந்ததால் இவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

le+bien+public+newspaperஅந்த பதற்றம் அடங்குவதற்குள் அடுத்த சில மணி நேரத்தில் அங்குள்ள யூத வழிபாட்டுத்தலம் அருகே மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதிலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதன் காரணமாக கோபன்ஹைகன் நகரம் முழுவது பெரும் பதற்றம் நிலவியது. எனினும், விரைந்து நடவடிக்கை எடுத்த காவல் துறையினர், இந்த சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர்.

பிரான்ஸ் தாக்குதலை நினைவுபடுத்துவது போல் நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.