Home கலை உலகம் உடல்நலம் குறித்து வதந்தி: நான் நலமுடன் இருக்கிறேன் நடிகை மனோரமா உருக்கம்!

உடல்நலம் குறித்து வதந்தி: நான் நலமுடன் இருக்கிறேன் நடிகை மனோரமா உருக்கம்!

547
0
SHARE
Ad

Manorama-Picsசென்னை, பிப்ரவரி 17 – ”இறைவன் அருளாலும், மக்களின் வேண்டுதலாலும், நான் நலமுடன் இருக்கிறேன்; வதந்திகளை நம்ப வேண்டாம் என  நடிகை மனோரமா ( 72) கூறினார்.

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து, ‘ஆச்சி’ என சினிமா துறையினராலும், ரசிகர்களாலும் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை மனோரமா.

முதுமை காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சென்னை, தி.நகரில் உள்ள மனோரமாவின் வீட்டிற்கு கடந்த செப்டம்பரில் நடிகர் மன்சூர் அலிகான் தன் மகள் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்றார்.

#TamilSchoolmychoice

அப்போது, மனோரமா உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக, மன்சூர் அலிகான் தெரிவித்ததால் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.’என் மீது, அன்பும், மரியாதையும் கொண்டவர் மன்சூர் அலிகான்.

என் உடல் நிலையை பார்த்துவிட்டு கூறி விட்டார்; நான் நலமாக இருக்கிறேன்’ என, அப்போது, மனோரமா கூறினார். குடும்ப மருத்துவர் மூலம், வீட்டிலிருந்தபடியே தொடர்ந்து சிகிச்சையும் எடுத்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக, மனோரமாவின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் கசிந்தன. இது குறித்து, சென்னை வீட்டில் நேற்று மனோரமா கூறியதாவது;

“இறைவனின் அருளாலும், மக்களின் வேண்டுதலாலும் நான் நலமுடன் இருக்கிறேன். நான் இன்னும் பல ஆண்டுகள் உங்களிடையே சந்தோஷமாக வாழ்வேன். என் குடும்பத்தினர் என்னை நல்லபடியாக பார்த்துக் கொள்கின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என ஆச்சி மனோரமா கூறினார்.