Home தொழில் நுட்பம் ஐபோன்களுக்கு ஈடாக ஆப்பிள் வாட்ச் – டிம் குக் ஆச்சரியம்!

ஐபோன்களுக்கு ஈடாக ஆப்பிள் வாட்ச் – டிம் குக் ஆச்சரியம்!

1104
0
SHARE
Ad

watch-dmவாஷிங்டன், மார்ச் 2 – ஒரு கைக்கடிகாரம் உங்கள் கார் சாவியாக பயன்பட்டால், ஒரு கைகடிகாரம் உங்கள் கடன் அட்டைகளுக்கு பதிலாக பயன்பட்டால், திறன்பேசிகள் செய்யும் அத்தனை வேலைகளையும் ஒரு கைகடிகாரம் செய்தால், இணையத்தையும் அது இணைத்தால்.

அப்படி ஒரு கடிகாரம் இருக்கிறதா என்ன? இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை சொல்ல வருகிறது ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch). புதுமையிலும் புதுமை, சிறப்பாவைகளுள் சிறந்தது இதுவே ஆப்பிளின் வெற்றிக்கான மந்திரம்.

பயனர்களின் மனநிலை என்ன என்பதை முன்னரே அறிந்து அதற்கு தகுந்த தயாரிப்புகளை உருவாக்குவதே ஆப்பிளின் எண்ணமாக இருந்து வருகிறது. விரைவில் வெளியாக இருக்கும் ஆப்பிள் வாட்ச் இந்த கூற்றுகளை உண்மை என நிரூபிக்கும்.

#TamilSchoolmychoice

நீண்டகாலமாக கைக்கடிகாரம் கட்டாமல் இருந்து வந்த ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் கூக்கின் கையில் புதியதாய் கைகடிகாரம் ஒன்று தென்படுகிறது. அது குறித்து டெலிகிராஃப் பத்திரிக்கையாளர் கேட்டதற்கு, டிம் குக் கூறியதாவது:-

apple-watch-selling-points“ஆச்சரியம் வேண்டாம், இது ஆப்பிள் வாட்ச் தான். இனி இந்த கடிகாரம் இல்லாமல் என்னால் வேறு எதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என் திறன்பேசிகளுக்கு வரும் எல்லா விதமான அறிவிப்புகளையும், குறுந்தகவல்களையும் இந்த கைக்கடிகாரம் காட்டி விடுகிறது”.

“இனி யாரும் பெரிய கார் சாவிகளை பயன்படுத்தத் தேவையில்லை. ஆப்பிள் பே திட்டமும் இந்த கடிகாரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், ஒரு கைக்கடிகாரத்திற்கு தேவையான கவர்ச்சிகரமான வடிவமைப்பும் இதில் உள்ளது”.

“இவை அனைத்தும் இருந்தும் இதன் மின்சக்தி ஒருநாள் வரை தாங்கும் என்பது தான் இதன் சிறப்பு” என்று அவர் கூறியுள்ளார். மிக விரைவில் சந்தைக்கு வர இருக்கும் ஆப்பிள் வாட்ச் குறித்த பிற தகவல்களும், விலை நிலவரங்களும் விரைவில் தெரியவரும்.