Home கலை உலகம் அஜித்-ஷாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

அஜித்-ஷாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

720
0
SHARE
Ad

ajithசென்னை, மார்ச் 2 – அஜித் மற்றும் ஷாலினி தம்பதிக்கு இன்று காலை 4.30 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது. ’அமர்க்களம்’ படத்தில் காதலர்களாக நடித்த அஜித்-ஷாலினி ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் காதலித்து கடந்த 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

2இவர்களுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. அவர் பெயர் அனௌஷ்கா. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாலினி மீண்டும் கர்ப்பமானார்.

இதையடுத்து அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று காலை 4.30 மணியளவில் அஜித்-ஷாலினி தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

#TamilSchoolmychoice

collage_52இதனை ரசிகர்கள் ‘வெல்கம் குட்டித் தல’ என செல்லமாக ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் இணையத்தளத்தில் பதிவு செய்து கொண்டாடி வருகின்றனர்.