Home கலை உலகம் சிம்புவின் ‘வாலு’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

சிம்புவின் ‘வாலு’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

692
0
SHARE
Ad

Vallu-New-HD-movie-posters1சென்னை, மார்ச் 12 – சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வாலு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடிக்கும் போது சிம்பு, ஹன்சிகா காதல் பிரச்சனைகளால் சிறிது காலம் படப்பிடிப்பு முடிவடையாமல் நின்றது. படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வந்ததாகவும், தயாரிப்பாளரிடம் பிரச்சனை என்றும் செய்திகள் வெளியாகின.

அதன்பிறகு இந்தப் பிரச்சினைகள் எல்லாம் சுமூகமாக முடிந்து படப்பிடிப்பை தொடங்க ஆரம்பித்தனர். கடைசியாக படப்பிடிப்பை முடித்து, பாடல்கள், முன்னோட்டம் மற்றும் காணொளி பாடல்கள் ஆகியவற்றை வெளியிட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இப்படத்தை இன்று தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சிம்பு. இப்படம் இம்மாதம் 27-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.