Home வணிகம்/தொழில் நுட்பம் ஐபோன் பயனாளிகள் 40 சதவீதம் பேர் ஆப்பிள் வாட்ச்சை வாங்கத் தயார்!

ஐபோன் பயனாளிகள் 40 சதவீதம் பேர் ஆப்பிள் வாட்ச்சை வாங்கத் தயார்!

668
0
SHARE
Ad

apple-watch-release-date-970-80நியூயார்க், மார்ச் 20 – அமெரிக்காவில் மட்டும் ஐபோன்களை வைத்திருக்கும் 40 சதவீதம் பேர் ஆப்பிள் வாட்ச்சின் வரவிற்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக களமிறக்கும் புதிய தயாரிப்பான ஆப்பிள் வாட்ச்சிற்கு உலகம் முழுவது பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதே தருணத்தில் ஆப்பிள் எத்தகைய தயாரிப்பினை உருவாக்கி உள்ளது என்ற எதிர்பார்ப்பும் போட்டி நிறுவனங்களுக்கு மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரியுட்டர்ஸ் பத்திரிகை சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி,

“ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் ஆப்பிள் வாட்ச்சின் வரவை அமெரிக்காவில் மட்டும் 40 சதவீத பயனாளிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். நட்பு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஆப்பிள் வாட்ச் பற்றிய அளவளாவல்களே அதிகம் உள்ளன.”

#TamilSchoolmychoice

“இந்த எதிர்பார்ப்பு ஆப்பிளின் வர்த்தகத்திற்கு சாதகமானதாக இருக்கும். அதே சமயத்தில், மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு கூடுதல் சுமையாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும் ஆப்பிள் வாட்ச்சீன தரத்தை பொறுத்து அதன் வர்த்தகம் இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி பசிபிக் கிரஸ்ட் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வாளர் ஆண்ட்ரூ ஹார்க்ரீவஸ் கூறுகையில், “ஆப்பிள் வாட்ச் எத்தனை நபர்களுக்கு தேவைப்படுகிறது என்ற விவாதங்கள் தற்போது தேவையற்றது”.

“ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப் பெரிய தொடக்க நிலை வர்த்தகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் அதன் பிறகான வர்த்தகம் தயாரிப்பின் தரத்தை பொறுத்து இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் முதல் முறையாக புதிய தயரிப்பாக வெளிவர இருக்கும் ஆப்பிள் வாட்ச், வெறும் கடிகாரமாக மட்டுமல்லாமல் கார் சாவியாகவும், உடல் நலனை கண்காணிக்கும் கருவியாகவும் திறன்பேசிகளுக்கு வரும் எல்லா விதமான அறிவிப்புகளையும், குறுந்தகவல்களையும் கட்டுவதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.