Home இந்தியா நரேந்திர மோடியால் தெற்காசியா எழுச்சி – அமெரிக்கா பாராட்டு!

நரேந்திர மோடியால் தெற்காசியா எழுச்சி – அமெரிக்கா பாராட்டு!

527
0
SHARE
Ad

modi22வாஷிங்டன், மார்ச் 26 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியின் காரணமாக தெற்காசியாவில் நம்பகத்தன்மையும், புத்துணர்ச்சியும் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் மோடியின் ஆட்சி குறித்து கூறியதாவது:- “இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு நரேந்திர மோடி தலைமையில் அமைந்த புதிய ஆட்சி, இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், தெற்காசிய நாடுகளிலும் புதிய நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.”

“ஜனநாயக முறையில் இந்தியாவில் பொறுப்பேற்றிருக்கும் அரசின் ஆட்சியால், இந்திய-அமெரிக்க உறவு மற்ற நாடுகளை விட பன்மடங்கு பலமடைந்துள்ளது.”

#TamilSchoolmychoice

“அதேபோல, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய குடியரசு தின விழா வருகை இரு நாடுகளின் உறவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக மாறியது. இதனால் இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, பொருளாதாரம், வளர்ச்சி, சுற்றுப்புறச் சூழல் போன்ற முயற்சிகளில் புதிய எழுச்சியை ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.