Home நாடு ஜெர்மன்விங்ஸ் விபத்து: மீட்புப் பணிகள் தீவிரம் (படத்தொகுப்பு)

ஜெர்மன்விங்ஸ் விபத்து: மீட்புப் பணிகள் தீவிரம் (படத்தொகுப்பு)

537
0
SHARE
Ad

பாரிஸ், மார்ச் 26 – பிரான்ஸ் நாட்டில் தெற்கு ஆல்ப்ஸ் மலையில், 150 பேருடன் சென்ற ஜெர்மன்விங்ஸ் குறைந்த கட்டண விமானம் ஏ320, நேற்று முன்தினம் (மார்ச் 24) விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 150 பேரும் மரணமடைந்தனர்.

இந்நிலையில் மீட்புப் பணிகள் தற்போது அதிவிரைவாக நடைபெற்று வருகின்றன.

Germanwings6

#TamilSchoolmychoice

(ஆல்ப்ஸ் மலையில் சிதறிக் கிடக்கும் விமானத்தின் பாகங்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர்)

Germanwings

(சிதறிக் கிடக்கும் விமானத்தின் பெரிய பாகங்களில் ஒன்று)

Germanwings1

(விமானத்தின் ஜன்னல்புற பாகம்)

Germanwings2

(விமானத்தின் பாகங்கள் இருக்கும் இடங்களில் அடையாளத்திற்காக சிவப்பு நிற சின்னங்களைப் பதித்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் மீட்புக்குழுவினர்)

 

??????????????????

(இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் இரவு நேரங்களில் தேடுதல் பணிகளை நிறுத்தி வைத்த மீட்புப் படையினர் காலையில் மீண்டும் மீட்புப் பணிகளுக்குத் தயாராகின்றனர்) 

படங்கள்: EPA