Home உலகம் இனி இரண்டு விமானிகளும் விமானிகள் அறையில் இருக்க வேண்டும் – புதிய விதிமுறை அறிவிப்பு

இனி இரண்டு விமானிகளும் விமானிகள் அறையில் இருக்க வேண்டும் – புதிய விதிமுறை அறிவிப்பு

596
0
SHARE
Ad

maxresdefault

கோலாலம்பூர், மார்ச் 27 – ஜெர்மன்விங்ஸ் விமானப் பேரிடர் ஏற்பட துணை விமானி தான் காரணம் என நேற்று பிரஞ்சு அதிகாரிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி விமான நிறுவனங்கள், இனி விமானிகள் அறையில் இருந்து விமானிகள் இருவரும் வெளியேறக் கூடாது என்று புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் ஏற்கனவே இந்த சட்டத்தை கட்டாயமாகப் பின்பற்றி வரும் நிலையில், நார்வெயன் ஏர் ஷட்டில், பிரிட்டன் ஈசிஜெட், ஏர் கனடா மற்றும் ஏர் பெர்லின் ஆகிய விமான நிறுவனங்கள் நேற்று ஜெர்மன்விங்ஸ் பேரிடருக்கான காரணம் அறிந்த ஒரு சில மணி நேரங்களில் புதிய விதிமுறையை அறிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

அதாவது, இரண்டு விமானிகள் எல்லா நேரங்களிலும் விமானிகள் அறையில் இருக்க வேண்டும் என்பது தான் இந்த புதிய விதிமுறையாகும்.

என்றாலும், ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான லூப்தான்சியாவின் தலைமை அதிகாரி கார்ஸ்டென் ஸ்போர் மற்றும் இந்த புதிய விதிமுறை தேவையில்லாத ஒன்று என கருத்து தெரிவித்துள்ளார்.

“இங்கே விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை என்று கருதுகின்றேன்” என கார்ஸ்டென் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.