Home உலகம் ஜெர்மன்விங்ஸ் எதிரொலி: இந்தியாவின் முக்கிய விமான சட்டத்தை பின்பற்ற ஐரோப்பிய நிறுவனங்கள் முடிவு!

ஜெர்மன்விங்ஸ் எதிரொலி: இந்தியாவின் முக்கிய விமான சட்டத்தை பின்பற்ற ஐரோப்பிய நிறுவனங்கள் முடிவு!

562
0
SHARE
Ad

MH 370 Cockpit 440 x 215புதுடெல்லி, மார்ச் 28 – கடந்த செவ்வாய்க் கிழமை, ஜெர்மன்விங்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 150 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேரும் உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தலைமை விமானி தனது அறையை விட்டு வெளியே சென்ற தருணத்தில் துணை விமானி விமானிகள் அறையை தாழிட்டு விமானத்தை வேண்டுமென்றே தாழ்வாகப் பறக்கச் செய்து மலையில் மோதியது தெரிய வந்தது.

உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை. இதற்கு காரணம், கடந்த 2010-ம் ஆண்டும் இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தால் கொண்டுவரப்பட்ட முக்கிய சட்டமாகும்.

#TamilSchoolmychoice

அந்த சட்டத்தின்படி, விமானிகள் அறையில் இருக்கும் விமானிகளின் குழுவில் யாராவது ஒருவர் வெளியே சென்றால், அறைக்குழுவைச் சேர்ந்த மற்றொருவர் உடனடியாக உள்ளே வர வேண்டும்.

இத்தகைய நடைமுறை இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு இருந்தாலும், ஐரோப்பாவில் இதுவரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. ஒருவேளை இந்த சட்டம் நடைமுறையில் இருந்திருந்தால், ஜெர்மன்விங்ஸ் விமானத்திற்கு இத்தகைய நிலை ஏற்பட்டு இருக்காது.

தற்சமயம் ஐரோப்பிய விமான கட்டுப்பாட்டு அமைப்பு ஜெர்மன்விங்ஸ் விபத்து பற்றிய முழு அறிக்கையை பிரான்சிடம் கோரியுள்ளது. முழு அறிக்கை வெளியான பிறகு, மேற்கூறிய சட்டதிட்டங்களை, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஐரோப்பிய விமான கண்காணிப்பு மையம் வலியுறுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.