Home நாடு பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு கைது!

பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு கைது!

615
0
SHARE
Ad

matsabu7 (1)பினாங்கு, மார்ச் 28 – இன்று பிற்பகல் நடைபெறவிருக்கும் கித்தா லாவான் பேரணி தொடர்பில் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் மாட் சாபு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை பினாங்கிலுள்ள ஓர் உணவகத்தில் வைத்து நேற்று இரவு 12 மணியளவில் புக்கிட் அமான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது அவருடன் இருந்த பினாங்கு மாநில பாஸ் கட்சியின் ஆணையர் முஜாகிட் யுசுப் ராவா இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

முகமூடி அணிந்து ஆயுதம் ஏந்தி வந்த காவல்துறையினர் மாட் சாபுவை கைது செய்ததாக முஜாகி தெரிவித்துள்ளார்.