Home இந்தியா அரவிந்த் கெஜ்ரிவால் மீது மூத்த தலைவர்கள் நேரடி குற்றச்சாட்டு!

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மூத்த தலைவர்கள் நேரடி குற்றச்சாட்டு!

466
0
SHARE
Ad

1425375980-8011புதுடெல்லி, மார்ச் 28 – ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்கள்  குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

டெல்லி சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தற்போது, உட்கட்சிப் பூசலில் தவிக்கிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

“உள்கட்சி ஜனநாயகம், வெளிப்படையான தன்மை, தொண்டர்களை மதித்தல் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஆம் ஆத்மி கட்சி, இன்று பிற கட்சிகளால் கேள்வி கேட்கப்படுகிற நிலைக்கு ஆளாகி இருக்கிறது. பாரதீய ஜனதா, காங்கிரசுடன் இந்தக் கட்சி வைத்து பார்க்கப்படுவது பெரும் வருத்தத்தை அளிக்கின்றது” என்று கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும் அவர்கள் கூறுகையில், “காங்கிரஸ் உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சி அமைக்க முயற்சித்த பிரச்சினை, மதுபானங்கள் பறிமுதல் செய்த பிரச்சினை ஆகியவற்றுக்கு எதிராக நாங்கள் கேள்வி எழுப்பினோம். இவற்றுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நாங்கள் கெஜ்ரிவாலுக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.”

“கட்சி, பழைய பாதைக்கு திரும்ப வேண்டும் என்பது தான் எங்கள் விரும்பம். பிற கட்சிகளின் பாதையில் ஆம் ஆத்மி நடைபோடக்கூடாது” என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கெஜ்ரிவால் சர்வாதிகாரிபோல செயல்படுவதாக பிரசாந்த் பூஷண் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.