Home நாடு மலேசியன் இன்சைடர் 3 ஆசிரியர்களும் ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்படுவர்!

மலேசியன் இன்சைடர் 3 ஆசிரியர்களும் ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்படுவர்!

547
0
SHARE
Ad

he-Malaysian-Insider-TMI-logo (1)கோலாலம்பூர், மார்ச் 30 – முத்தியாரா டாமன்சாராவில் உள்ள மலேசியன் இன்சைடர் இணைய செய்தித் தளத்தின் அலுவலகத்தில் அதிரடி பரிசோதனை நடத்திய மலேசியக் காவல் துறை, அந்த செய்தித் தளத்தின் மூன்று ஆசிரியர்களையும் கைது செய்திருக்கிறது.

ஜிஞ்சாங்கிலுள்ள காவல் நிலையத்தில் அம்மூவரும் இன்றிரவு விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்படுவர்.

தேசிய நிந்தனை சட்டம் மற்றும் 1998ஆம் ஆண்டின் தொடர்பு, பல்ஊடக சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என கோலாலம்பூர் காவல் துறையின் குற்றவியல் பிரிவு தலைவர் சைனுடின் அகமட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று திங்கட்கிழமை 5.45 மணியளவில் மலேசியன் இன்சைடரின் நிர்வாக ஆசிரியர் லயனல் மொராய்ஸ், பகாசா மலேசியா பிரிவு ஆசிரியர் சுல்கிப்ளி சுலோங், பகாசா மலேசியா செய்திப் பிரிவு ஆசிரியர் அமின் இஸ்கண்டார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கணினிகளும், கைத்தொலைபேசிகளும் காவல் துறையின் பரிசோதனையின்போது கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை, காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் ஹூடுட் சட்டம் குறித்த செய்தி ஒன்றின் தொடர்பில் மலேசியன் இன்சைடரின் ஆசிரியர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மலேசியன் இன்சைடரின் செய்தியின்படி, ஷாரியா நீதிமன்றங்கள் தொடர்பான சட்டத் திருத்தங்களை ஆட்சியாளர்கள் மன்றம் கடந்த மார்ச் 11இல் நிராகரித்து எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு சில தரப்பினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், மலாய் ஆட்சியாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த சட்டத் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டதாக மலேசியன் இன்சைடரின் செய்தி தெரிவித்திருந்தது.

இருப்பினும் பின்னர் ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் டத்தோஸ்ரீ சைட் டானியல் சைட் அகமட் ஹூடுட் சட்டம் தொடர்பாக எந்தவித பத்திரிக்கை அறிக்கையும் விடுக்கவில்லை என்று கூறி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை செய்திருந்தார்.