Home நாடு 2009 மத்திய செயலவையின் 3ஆம் தரப்பு விண்ணப்பம் ஏப்ரல் 15இல் விசாரணை!

2009 மத்திய செயலவையின் 3ஆம் தரப்பு விண்ணப்பம் ஏப்ரல் 15இல் விசாரணை!

507
0
SHARE
Ad

MIC-logoகோலாலம்பூர், ஏப்ரல் 2 – இன்று நடைபெற்ற மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில் 2009 மஇகா மத்திய செயலவை, தங்களையும் மூன்றாம் தரப்பாக இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள சமர்ப்பித்திருந்த விண்ணப்பம் விசாரணைக்கு வந்தது.

2009ஆம் மஇகா மத்திய செயலவையின் விண்ணப்பம் மீதான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் அதுவரை  2009ஆம் மஇகா மத்திய செயலவை கூட்டங்கள் எதனையும் நடத்தக் கூடாது என்ற உத்தரவையும் நீதிபதி இன்று பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில், ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த மஇகா கிளைத் தேர்தல்களும் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஏப்ரல் 15ஆம் தேதி விசாரணையின் முடிவு தெரியும் வரை கிளைத்தேர்தல்கள் எதனையும் எந்தத் தரப்பும் நடத்த முடியாது என்றும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

2009ஆம் ஆண்டின் மத்திய செயலவை சார்பாக, தங்களை மூன்றாம் தரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்ற விண்ணப்பத்தை மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணனும், 2013 தேர்தலில் மத்திய செயற்குழு உறுப்பினராகப் போட்டியிட்ட கெடா ஆனந்தனும் சமர்ப்பித்திருந்தனர்.

(மேலும் விவரங்கள் தொடரும்)