Home இந்தியா தற்கொலையை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு கடன் – ரிசர்வ் வங்கிக்கு மோடி அறிவுரை!

தற்கொலையை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு கடன் – ரிசர்வ் வங்கிக்கு மோடி அறிவுரை!

635
0
SHARE
Ad

modi-rajan_0_0_0மும்பை, ஏப்ரல் 3 – ஏழை, எளிய, விவசாயிகளுக்கு எளிதாக கடன் உதவிகள் கிடைப்பதை அனைத்து வங்கிகளும் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம்  தனியாரிடமிருந்து வாங்கும் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்வது குறைந்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ரிசர்வ் வங்கியின் 80-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது; “வரும் 2035-ஆம் ஆண்டில் ரிசர்வ்  வங்கி தனது 100-வது ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளது”.

“இந்தத் தருணத்தில் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கு ஏற்ற நிதி சேவைகள் – கடன் உதவி  திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் 20 ஆண்டு செயல் திட்டத்தை ரிசர்வ் வங்கி உருவாக்க வேண்டும்”.

#TamilSchoolmychoice

raghuram-rajan-L“கடன் தொல்லையால், நாட்டில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக செய்திகள் வருகின்றன. இந்த செய்திகள் வங்கிகளிடையே பாதிப்பை  ஏற்படுத்தவில்லையே? விவசாயிகளுக்கு ஏற்ற கடன் உதவி திட்டங்களை, நிதி திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்”.

“ஏழை விவசாயிக்கு கடன்  கொடுப்பதால், வங்கிகள் முடங்கிவிடப் போவதில்லை. அதேபோல் நாட்டின் கிழக்கு மாநிலங்களில் மிக அதிக அளவு இயற்கை ஆதாரங்கள் உள்ளன. அதை  பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான நிதி திட்டங்களை உருவாக்க வேண்டும்”.

s2015040263774“மரங்களை நடுவதற்கு கூட விவசாயிகளுக்கு கடன் அளிக்கலாம். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வங்கிகள் உதவிட முடியும். நான் ஏழை, எளிய  விவசாயிகளின் பிரதிநிதியாக இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறேன்”.

‘கனிவுடன் இதை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு ரிசர்வ் வங்கியும் உதவிட வேண்டும். ரூபாய் நோட்டுகளை அச்சிடும் தாள்கள், மை உள்ளிட்டவற்றை உள்நாட்டில் உற்பத்தி  செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்” என மோடி பேசினார்.