Home நாடு நிலத்தில் ஏற்பட்ட பெரிய குழிகள்: ஷா ஆலம் செக்‌ஷன் 7 ‘பேரிடர் பகுதி’ ஆக அறிவிப்பு!

நிலத்தில் ஏற்பட்ட பெரிய குழிகள்: ஷா ஆலம் செக்‌ஷன் 7 ‘பேரிடர் பகுதி’ ஆக அறிவிப்பு!

656
0
SHARE
Ad

ஷா ஆலம், ஏப்ரல் 4 – ஷா ஆலமில் செக்‌ஷன்  7 -ல் வீடுகள் அமைந்துள்ள பகுதி முழுவதும் ‘பேரிடர் பகுதி’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணம், அப்பகுதியில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவு மற்றும் குழிகள் காரணமாக அங்கு வசித்து வரும் குடும்பங்கள் அனைத்தும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

klgruntuh15 13

#TamilSchoolmychoice

ஜாலான் பிளம்பும் 7 /101 -ல் அமைந்துள்ள வீடுகளுக்கு பின்புறம் சுமார் அரை மீட்டர் அளவிற்கு மிகப் பெரிய குழி ஏற்பட்டுள்ளதோடு, 100 மீட்டர் அளவுள்ள சுவர் ஒன்று சாய்ந்துள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள வீடுகளில் விரிசல்களும் விழுந்துள்ளன.

இந்த பேரிடரை கண்டு பயந்து போன மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தங்கும் விடுதிகளில் இருக்கின்றனர். காலுக்கு அடியில் பூமி நகர்வதையும், பூமிக்கு அடியில் தண்ணீர் போகும் சத்தத்தையும் அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து பெட்டாலிங் மாவட்ட அதிகாரி டத்தோ முகமட் மிஸ்ரி இட்ரிஸ், அப்பகுதி ‘பேரிடர் பகுதி’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு 10 மணியளவில் தெரிவித்துள்ளார்.