Home கலை உலகம் வடிவேலுவின் நகைச்சுவைக்காக அவருடன் நடிக்க சம்மதித்தேன் – நடிகை சதா

வடிவேலுவின் நகைச்சுவைக்காக அவருடன் நடிக்க சம்மதித்தேன் – நடிகை சதா

769
0
SHARE
Ad

30982சென்னை, ஏப்ரல் 4 – யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு, சதா நடிக்கும் படம் ‘எலி’. படத்திற்கு இசை வித்யாசாகர். தற்போது ‘எலி’ படத்திற்காக பிரத்யேக முகநூல்,மற்றும், டுவிட்டர் பக்கங்கள் உள்ளன. மேலும் யூடியூபிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த யூடியூப்பில் ‘எலி’ படம் குறித்து வடிவேலு பேசும் காமெடியான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. ’தெனாலிராமன்’ இயக்குநர் யுவராஜ் இயக்கும் இப்படம் 1970-களில் நடப்பது போன்ற துப்பறியும் படமாம்.

தனியார் துப்பறியும் நிபுணராக நடிக்கும் வடிவேலு இப்படத்தில் ‘எலி’ போல் வேலைசெய்து தீர்வு கான இருக்கிறாராம். இப்படத்தின் வடிவேலுவுக்கு ஜோடியாக சதா நடிக்கிறார். ஜெயம் ரவி, மாதவன், விக்ரம், என முன்னனி நடிகர்களுடன் நடித்தவர் சதா. தற்போது வடிவேலுவுக்கு ஜோடியானது குறித்து அவர் கூறுகையில்;

#TamilSchoolmychoice

“படத்தின் கதையும், புதுவிதமான எனது கதாபாத்திரமும், வடிவேலுவின் நகைச்சுவைக்காகவும் இதில் நடிக்க சம்மதித்தேன்‘ என்றார். ஏப்ரலில் இதன் படப்பிடிப்பு முடிந்து மே மாதத்தில் படம் திரைக்கு வர உள்ளது.