Home இந்தியா இந்தியாவில் 300 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கிறது ஜியோனி!

இந்தியாவில் 300 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கிறது ஜியோனி!

490
0
SHARE
Ad

arvind vohraபுது டெல்லி, ஏப்ரல் 5 – இந்தியாவில் செல்பேசிகளுக்கான சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. சியாவுமி, ஹவாய் நிறுவனங்களைத் தொடர்ந்து ‘ஜியோனி’ (Gionee) நிறுவனமும் இந்தியாவில் சுமார் 300 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

திறன்பேசிகளுக்கான தேவையும், வர்த்தகமும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதனை சீன நிறுவனங்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. கடந்த வருடத்தில் மட்டும் ஜியோனி நிறுவனம், இந்தியாவில் 4 மில்லியன் திறன்பேசிகளை விற்பனை செய்துள்ளது. அந்நிறுவனத்தின் உலகளாவிய விற்பனையில் ஏழில் ஒரு பங்கு இந்தியாவில் விற்பனையாகி உள்ளதால், அதன் வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ஜியோனியின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் வோஹ்ரா கூறுகையில், “இந்தியாவில் எங்கள் திறன்பேசிகளுக்கான வர்த்தகம் பெருகி உள்ளது. கடந்த வருடத்தை விட நடப்பாண்டில் எங்களின் வர்த்தகம் இரு மடங்காகும் என்று நாங்கள் நம்புகின்றோம். அதன் காரணமாக இந்தியாவில் முதலீடு செய்ய தீர்மானித்துள்ளோம்.”

#TamilSchoolmychoice

“தற்சமயம், ஜியோனி திறன்பேசிகளுக்கான தயாரிப்பு ஆலை ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளோம். அதற்குத் தேவையான இடங்களையும் நாங்கள் தேர்வு செய்துவிட்டோம். இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.