Home உலகம் ஏமனில் சிக்கித் தவித்த இந்தியர்களை பாகிஸ்தான் அரசு மீட்டது!

ஏமனில் சிக்கித் தவித்த இந்தியர்களை பாகிஸ்தான் அரசு மீட்டது!

512
0
SHARE
Ad

yemen-evacuation11இஸ்லாமாபாத், ஏப்ரல் 5 – ஏமனில் தென்கிழக்கு நகரமான மொகல்லாவில் சிக்கித் தவித்த 11 இந்தியர்களை பாகிஸ்தான் அரசு பத்திரமாக மீட்டுள்ளது.

ஏமனில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்து வருகின்றது. சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை, ஏமன் கிளர்ச்சியாளர்கள் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உள்நாட்டுப் போரில் தினமும் பலியாகி வரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஏமனில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி தொடர்ந்து மீட்டு வருகின்றது.

இந்நிலையில், போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் தென்கிழக்கு நகரமான மொகல்லாவில் சிக்கித்தவித்த நூற்றுக்கும் அதிகமான பாகிஸ்தானியர்களை அந்நாட்டு அரசு நேற்று மீட்டுள்ளது. அப்பொழுது அங்கு தவித்த 11 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “கடந்த வெள்ளி மொகல்லாவை அடைந்த எங்கள் பிஎன்எஸ் அஸ்லாட் கப்பல், சனிக்கிழமை காலை ஆஷ் ஷிகர் துறைமுகத்தினருகே இருந்த 148 பாகிஸ்தானியர்களையும், அவசரமாக வெளியேற வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த 11 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டுள்ளது. இந்தக் கப்பல் வரும் 7-ம் தேதி கராச்சியை வந்தைடையும்” என்று தெரிவித்துள்ளது.