Home நாடு அன்வார் இப்ராகிம் தந்தை காலமானார்!

அன்வார் இப்ராகிம் தந்தை காலமானார்!

554
0
SHARE
Ad

Anwar Ibrahimகோலாலம்பூர், ஏப்ரல் 5 – தற்போது சிறையில் இருந்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தந்தையார் டத்தோ இப்ராகிம் அப்துல் ரஹ்மான் இன்று ஞாயிறு அதிகாலை 1.45 மணியளவில் காலமானார் என அன்வாரின் துணைவியார் வான் அசிசா வான் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

தனது முகநூல் (பேஸ்புக்) பதிவில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மறைந்த டத்தோ இப்ராகிமின் நல்லுடல் இன்று Lot 459, Pinggir Pelangi Pagi, Country Heights, Kajang என்ற முகவரிக்குக் கொண்டு வரப்படும் என்றும் வான் அசிசா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று ‘சோஹோர்’ தொழுகைக்குப் பின்னர் அவரது நல்லுடல் சுங்கை ரமால் இஸ்லாமிய மயானக்கொல்லையில் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்வார் முதன் முறையாக சிறை சென்றபோது அவரது தாயார் காலமானார் என்றும் தற்போது அவரது தந்தையார் காலமாகியிருக்கின்றார் என்றும் வான் அசிசா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பினாங்கில் திட்டமிடப்பட்டிருந்த எனது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு காஜாங் திரும்பியுள்ளதாகவும் வான் அசிசா தெரிவித்துள்ளார்.