லண்டன், ஏப்ரல் 7 – இங்கிலாந்தின் பர்மிங் ஹாம் நகரில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் ’பிக் பாங்’ என்ற அறிவியல் மாநாடு கடந்த மாதம் நடந்தது. இதில் நடந்தப்பட்ட போட்டியில், 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்து விளக்கமளித்தனர்.
கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள பெர்சி பள்ளியில் படிக்கும் இந்திய வம்சாவளி மாணவரான பிரதாப் சிங், 1905-ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சிறப்பு சார்பியல் கோட்பாடு ஆய்வினை மேற்கொண்டு விளக்கினார்.
அவரது ஆய்வு கட்டுரைக்கு இன்ஸ்டிடியூட் ஆப் பிசிக்ஸ் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதாப் சிங்கிற்கு 500 பவுண்ட் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.