Home கலை உலகம் ’36 வயதினிலே’ படத்தில் நடிக்க சூர்யா தான் காரணம் – ஜோதிகா (காணொளியுடன்)

’36 வயதினிலே’ படத்தில் நடிக்க சூர்யா தான் காரணம் – ஜோதிகா (காணொளியுடன்)

695
0
SHARE
Ad

surya_jothika003சென்னை, ஏப்ரல் 7 – தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருந்தவர் ஜோதிகா. இவர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனித்துவந்தார்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ’36 வயதினிலே’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் நடந்தது.

இதில் பேசிய ஜோதிகா: ”இன்று நான் இந்த படத்தில் நடிக்கின்றேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் என் அப்பா, அம்மா தான் (சூர்யாவின் அப்பா, அம்மாவை அப்படி குறிப்பிட்டார்)”.

#TamilSchoolmychoice

“அவர்கள் தான் குழந்தைகளை வீட்டில் பார்த்து கொண்டார்கள். இவை அனைத்திற்கும் மேலாக எனக்கு உறுதுணையாக இருந்தது சூர்யா தான். அவர் தான் எனக்கு எல்லாமே’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் ஜோதிகா.