கோலாலம்பூர், ஏப்ரல் 7 – நஜிப்பின் தலைமைத்துவம் குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நஜிப் அவருடன் தனிப்பட்ட சந்திப்பை மேற்கொண்டதாக தேமு ஆதரவாளர்கள் சங்கத் தலைவர் (Barisan Nasional Backbenchers Club) டான்ஸ்ரீ ஷாரிர் சமத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஷாரிர், “நான் நஜிப்பிடம் அது பற்றி (சந்திப்பு பற்றி) கேட்டேன். துன் மகாதீர் மிகவும் கோபமும், தணிப்புமாக இருக்கின்றார் என்று கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.
“மகாதீர் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது, அடிமட்ட அளவில் இருக்கும் நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்று தெரியவில்லை. அதனால் தான் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு தங்களது கீழே இருப்பவர்களின் செயல்கள் தெரிவதில்லை. அதனால் தான் நாங்கள் அமைதியாக இருக்கின்றோம். ஆனால் இப்போது நாங்கள் பேசத் தொடங்கிவிட்டோம்” என்றும் ஷாரிர் குறிப்பிட்டுள்ளார் என தி மலேசியன் இன்சைடர்
இதனிடையே, நஜிப்பு தன்னை சந்தித்ததாகக் கூறப்படுவதை மகாதீர் மறுத்துள்ளார்.
“நஜிப்பை நான் சந்திக்கமாட்டேன். ஏற்கனவே அவரை சந்தித்த போது, அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆனால் 4 ஆண்டுகள் நான் அமைதியாக இருந்துவிட்டேன். நஜிப்புடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடும் காலகட்டமும் கடந்துவிட்டது” என்று மகாதீர் கூறியுள்ளதாக அஸ்ட்ரோ அவானி குறிப்பிட்டுள்ளது.