Home நாடு மே 7-ம் தேதி பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மே 7-ம் தேதி பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

539
0
SHARE
Ad

புத்ரா ஜெயா, ஏப்ரல் 8 – எதிர்வரும் ஏப்ரல் 25-ம் தேதி பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும், மே 7-ம் தேதி வாக்களிப்பும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Abdul Aziz Mohd Yusof story

இது குறித்து இன்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறுகையில், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் உள்ள 71,890 தகுதி வாய்ந்த வாக்காளர்களில், 71,252 பேர் வழக்கமான வாக்காளர்கள் மற்றும் 626 பேர் முன்கூட்டிய வாக்காளர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு 12 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அஜிஸ், மே 3-ம் தேதி முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓரினப்புணர்ச்சி வழக்கில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு எதிர்கட்சித் தலைவரும், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிறையில் அடைக்கப்பட்டதால், அவரது தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.