Home நாடு “நஜிப்பை அவரது வழியில் செயல்படவிடுங்கள்” – முகைதீன் கருத்து

“நஜிப்பை அவரது வழியில் செயல்படவிடுங்கள்” – முகைதீன் கருத்து

643
0
SHARE
Ad

ஜகார்த்தா, ஏப்ரல் 9 – நஜிப் அவரது வழியில் பணியாற்றி மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு அளியுங்கள் என்று துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், முன்னாள் பிரதமர் மகாதீருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

najib mahathir

நடப்பு அரசாங்கம் எடுக்கும் சில முடிவுகளை மகாதீரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஆனால் மகாதீர் மலேசியாவின் 4 வது பிரதமராக இருந்த போது, அவரது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட பல முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தனர் என்றும் முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கருத்துகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் இன்றைய அரசாங்கம் சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்தில், பொருட்களுக்கு மானியம், ஒரே மலேசியா உதவித் தொகை போன்ற உருமாற்றுத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதை மகாதீரால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், இதனால் மக்களுக்கு நன்மை ஏற்படுகின்றது என்பது உண்மை” என்று முகைதீன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.