Home நாடு இன்றிரவு டிவி3 நேர்காணலில் நஜிப் – மகாதீருக்கு பதிலளிப்பார் என எதிர்பார்ப்பு!

இன்றிரவு டிவி3 நேர்காணலில் நஜிப் – மகாதீருக்கு பதிலளிப்பார் என எதிர்பார்ப்பு!

462
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 9 – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தன் மீது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று இரவு டிவி3 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பதிலளிப்பார் என மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

Maha-Najib-685x320

‘அரசியல் மற்றும் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் டிவி3 தொலைக்காட்சியில் இன்று இரவு 10 அல்லது 11 மணியளவில் ஒளிபரப்பாகவுள்ள முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட கேள்வி பதில் நேர்காணலில், நஜிப் பதிலளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதை மலேசியாகினி செய்தி இணையதளமும், பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.