Home தொழில் நுட்பம் மலேசிய கூகுள் இணைய பக்கம் ஊடுருவல் செய்யப்பட்டதா?

மலேசிய கூகுள் இணைய பக்கம் ஊடுருவல் செய்யப்பட்டதா?

675
0
SHARE
Ad

googleகோலாலம்பூர், ஏப்ரல் 16 – கடந்த செவ்வாய்க்கிழமை, பயனர்கள் தங்கள் உலவியில், கூகுள் பக்கத்தை திறக்க முயற்சித்த பொழுது ‘கூகுள் மலேசியா ஹேக்ட் பை டைகர்-மேட் # பங்களாதேஷி ஹேக்கர்ஸ்‘ (Google Malaysia Hacked by Tiger-Mate #Bangladeshi Hacker) என்ற தகவலைக் கொண்ட பக்கமே திறந்தது. இதன் காரணமாக, மலேசியாவில் கூகுளின் இணைய தளம் தகவல் திருடர்களால் ஊடுருவல் (ஹேக்) செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கூகுள் மலேசியாவிற்கான செய்தித்தொடர்பாளர், “கூகுள் தளத்திற்கான தகவல்களோ, தரவுகளோ ஹேக் செய்யப்படவில்லை. ஆனால், google.com.my-ன் டிஎன்எஸ்‘ (DNS)-ல் சில பிரச்சனைகள் உருவாகி உள்ளன. அவை உடனடியாக சரி செய்யப்பட்டது.  இதுபோன்ற பிரச்சனைகள் எழுவது சகஜமான ஒன்று தான். இது தொடர்பாக மலேசியாவின் டிஎன்எஸ்-ஐ கவனித்து வரும் ‘மைனிக்’ (MYNIC) நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.  

இதேபோன்ற சைபர் தாக்குதல் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாஸ் நிறுவனத்தின் தளத்திற்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.