இஸ்தான்புல், ஏப்ரல் 20 – பாகிஸ்தானில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சீனப் பிரதமர் ஜீ ஜின்பிங் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று, பாகிஸ்தான் வரும் சீனப் பிரதமர் ஜீ ஜின்பிங், முன்னதாக அதிபர் மமூன் உசேனை சந்திக்கிறார். பின்னர் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன் வணிகம், பாதுகாப்பு, இருநாட்டு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார்.
மேலும் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தானுக்கு விற்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களிலும் அவர் கையெழுத்திடுகிறார். இந்த சந்திப்பையடுத்து, பாகிஸ்தானின் உள்கட்டமைப்புகளிலும், மின் உற்பத்தி திட்டங்களிலும் 46 பில்லியன் டாலர் அளவிற்கு சீனா முதலீடு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.