Home கலை உலகம் பிரபல நடிகை ஹேமமாலினியின் சென்னை வீட்டில் தீ விபத்து!

பிரபல நடிகை ஹேமமாலினியின் சென்னை வீட்டில் தீ விபத்து!

516
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_58737909794சென்னை, ஏப்ரல் 20 – பிரபல நடிகையும், மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினியின் சென்னை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த மரச்சாமான்கள், துணிகள் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.

சென்னை ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் மூன்று மாடிகளை கொண்ட குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது தளத்தில் நடிகை ஹேமமாலினிக்கு சொந்தமான ஒரு வீடு உள்ளது.

சென்னைப் பயணங்களின் போது ஹேமமாலினி அந்த வீட்டில் தங்குவது வழக்கம். மற்ற சமயங்களில் அந்த வீடு பூட்டியே கிடக்கும். இந்நிலையில், நேற்று அந்த வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து தீயணைப்பு படையினர் 20 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், மூச்சு சுவாசக் கவசம் அணிந்தபடி, வீட்டில் சூழ்ந்திருந்த புகையை தீயணைப்புப் படை வீரர்கள் அகற்றினர்.

அப்போது படுக்கை அறையின் குளிர்சாதனப் பொட்டி தீயில் எரிந்து கருகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், குளிர்சாதனப் பொட்டியில் இருந்து பரவிய தீ அறையில் இருந்த துணிமணிகள் மற்றும் பொருட்கள் மீது பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதனை தீயணைப்பு படையினர் அணைத்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக ஹேமமாலினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.