Home கலை உலகம் சிவாஜி இல்லத்தில் அமிதாப் – ஐஸ்வர்யா ராய்க்கு விருந்தளித்த ராம்குமார்-பிரபு!

சிவாஜி இல்லத்தில் அமிதாப் – ஐஸ்வர்யா ராய்க்கு விருந்தளித்த ராம்குமார்-பிரபு!

1367
0
SHARE
Ad

prabu-virunthuசென்னை, ஏப்ரல் 21 – சென்னையில் நடைபெற்ற ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ நகைக்கடை துவக்க விழாவில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சிவாஜியின் அன்னை இல்லத்தில் (அரண்மனையில்) விருந்தளிக்கப்பட்டது.

store-launch454546இந்த விருந்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள நடிகை மஞ்சு வாரியர்,  கல்யாண் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் கல்யாணராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

store-launchமிகப்பெரிய மேஜையில் அனைவருக்கும் ஒரே சமயத்தில் மதிய விருந்து வழங்கப்பட்டது. விருந்தினர்களை ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு மற்றும் சிவாஜி குடும்பத்தினர் மிகவும் அன்புடன் கவனித்து வகை வகையான உணவுகளை அவர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனர்.

#TamilSchoolmychoice

store-launch46முன்னதாக அன்னை இல்லத்தில் உள்ள சிவாஜியின் திருவுருவப்படத்தை அமிதாப் உள்ளிட்ட அனைவரும் வணங்கி மரியாதை செலுத்தி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.