Home உலகம் “நாதன் எப்போதும் போராட்ட வீரர்” – லீ சியான் லூங்

“நாதன் எப்போதும் போராட்ட வீரர்” – லீ சியான் லூங்

574
0
SHARE
Ad

சிங்கப்பூர், ஏப்ரல் 24 – சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு (வாதம்) ஏற்பட்டதை அறிந்து தான் மிகவும் வருத்தமடைந்ததாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.

Lee hsien

(படம்: லீ சியான் லூங் பேஸ்புக்)

#TamilSchoolmychoice

சிங்கப்பூர் பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, தனது மனைவி ஹோ சிங்குடன் சென்று பார்வையிட்டதாகவும், நாதன் தற்போது எழுந்து அமர்ந்து பேசும் அளவிற்குத் தேறி இருப்பதாகவும் லீ சியான் லூங் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாதன் எப்போதும் போராட்ட வீரராகவே இருந்து வருபவர் என்று குறிப்பிட்ட லீ, அவர் விரைவில் மீண்டு வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

90 வயதான எஸ்.ஆர்.நாதனுக்கு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

– ஃபீனிக்ஸ்தாசன்