Home கலை உலகம் சிம்பு – கவுதம் மேனன் எடுக்கும் புதிய படத்தில் ராணா!

சிம்பு – கவுதம் மேனன் எடுக்கும் புதிய படத்தில் ராணா!

834
0
SHARE
Ad

collageசென்னை, ஏப்ரல் 24 – அஜீத்தின் ’ஆரம்பம்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்த ராணாவிற்கு இப்போது கோலிவுட்டில் அடிக்கடி வாய்ப்புகள் குவிய துவங்கி விட்டன. ஏற்கனவே தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பகுபலி’ படம் தமிழில் ’மகாபலி’ என்னும் பெயரில் வெளியாக உள்ளது.

இதுமட்டுமின்றி தமிழில் உருவாகும்  மலையாள படமான ‘பெங்களூரு டேஸ்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் சிலம், பல்லவி நடித்து வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’.

‘என்னை அறிந்தால்’ படத்திற்காக இந்த படத்தை பாதியில் நிறுத்தி வைத்திருந்து இப்போது மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ராணா நடிக்க இருக்கிறார்.

#TamilSchoolmychoice

சமீபத்தில் சென்னையில் ஒரு தங்கும் விடுதியில் ராணாவை சந்தித்த கவுதம் மேனன் படத்தின் கதை மற்றும் ராணாவின் காதாப்பாத்திரம் குறித்து விளக்கவே, ராணாவும் சம்மதம் சொல்லிவிட்டாராம். எனவே ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் ராணா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.