Home உலகம் நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 686 ஆக உயர்வு!

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 686 ஆக உயர்வு!

526
0
SHARE
Ad

nepal3காட்மாண்டு, ஏப்ரல் 25 – நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்கு பல பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இதுவரை 686 பேர் பலியாகி உள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. காத்மாண்டுவின் முக்கிய பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

AP4_25_2015_000048B இந்தியா உதவிக்கரம்:

நேபாள நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் மோடி, இது தொடர்பாக அவர், அந்நாட்டின் பிரதமர் சுஷில் கொய்ராலாவுடன் தொலைபேசியில் பேசினார். பாங்காக் பயணத்தில் இருந்து அவசரமாக நாடு திரும்பும் கொய்ராலாவிடம், மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என மோடி உறுதி அளித்துள்ளார்.