Home இந்தியா நேபாள நிலநடுக்கம்:மீட்புப் பணிகளில் இந்தியா தீவிரம்!

நேபாள நிலநடுக்கம்:மீட்புப் பணிகளில் இந்தியா தீவிரம்!

528
0
SHARE
Ad

LCgoyalபுது டெல்லி, ஏப்ரல் 25 – நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 5 இந்திய பேரிடர் மீட்புக் குழுக்கள், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வர் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் சென்ற விமானத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உணவு, உடை மற்றும் குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய உள்துறை செயலாளர் எல்.சி.கோயல் கூறுகையில், “நேபாளத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யத் தயாராக உள்ளது. அங்கு நிலவும் சூழலை உடக்குடன் அறிந்து கொள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ளோம்” என்று கூறியுள்ளார்.