Home தொழில் நுட்பம் நேபாள நிலநடுக்கம்:பாதிக்கப்பட்டவர்களை கூகுள் உதவியுடன் தேடலாம்!

நேபாள நிலநடுக்கம்:பாதிக்கப்பட்டவர்களை கூகுள் உதவியுடன் தேடலாம்!

625
0
SHARE
Ad

personfinderகாட்மாண்டு, ஏப்ரல் 25  – நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை தேடவும், தனிநபர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யவும் கூகுள் ‘பர்சன் ஃபைண்டர்’ (Person Finder) என்ற இணைய பயன்பாட்டை நிறுவி உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள்  personal finder என்ற இந்த தளத்திற்குச் சென்று ‘I have information about someone’ என்ற கட்டத்திற்குள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

அதேபோல், பயனர்கள் தங்கள் உறவினர்களை, இந்த தளத்தில் உள்ள ‘I am looking for someone’ என்ற கட்டத்திற்குள் தேட முடியும். திறன்பேசிகளின் பயன்பாடு அதிகம் உள்ள இந்த நவீன காலத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை இந்த தளத்தில் பதிவு செய்தால், மீட்புக் குழுவினர் அவர்களை மீட்பதற்கு பேருதவியாக இருக்கும்.

#TamilSchoolmychoice