Home நாடு நேபாள நிலநடுக்கம்:மலேசியர்கள் பாதிப்பா?

நேபாள நிலநடுக்கம்:மலேசியர்கள் பாதிப்பா?

555
0
SHARE
Ad

DATUK OTHMAN HASHIMகோலாலம்பூர், ஏப்ரல் 25 – நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தில், மலேசியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என காட்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக நாட்டின் வெளியுறவுத் துறை செயலாளர் டத்தோ ஒத்மான் ஹஷிம் கூறுகையில், “தூதரக அதிகாரிகள் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகள்,  முகாம்கள் மற்றும் பாதுகாப்பு இடங்களில் மலேசியர்கள் உள்ளனரா என்ற விவரங்களைத் தேடி வருகின்றனர்”

“மேலும் அவர்கள் அந்நாட்டில் உள்ள காவல் துறையினரிடமும், மீட்புக் குழுவினரிடமும் நேரடியான தகவலுக்காக காத்திருக்கின்றனர். ஒருவேளை மலேசியர்கள் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை மலேசியத் தூதரகம் உடனடியாக மேற்கொள்ளும்” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice