Home நாடு பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் 4 முனைப் போட்டி

பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் 4 முனைப் போட்டி

597
0
SHARE
Ad

புக்கிட் மெர்தாஜம், ஏப்ரல் 26 – பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. இம்முறை தேசிய முன்னணி, பிகேஆர், பிஆர்எம் ஆகிய மூன்று கட்சிகள் களம் இறங்கியுள்ளன. மேலும் சுயேச்சை ஒருவரும் போட்டியிடுகிறார்.

Wan-Azizahபிகேஆர் சார்பில் அக்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா களம் இறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து தேசிய முன்னணியின் சுஹைமி சாபுடின், பிஆர்எம்மின் அஸ்மான் ஷா ஓத்மான் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சாலே இஷாக் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் 4 பேரும் சனிக்கிழமையன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். ஐந்தாவது வேட்பாளராக களமிறங்கவிருந்த டாக்டர் அப்துல்லா சவாவி கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகினார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து ஏராளமான தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் ஆதரவாளர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரி ஜுஸ்மி இஸ்மாயில் வேட்பாளர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

பெர்மாத்தாங் பாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஓரினப்புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதையடுத்து அரச மன்னிப்பு கோரினார். அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.

கடந்த 2013இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிகேஆர் ஆலோசகரான அன்வார் இப்ராகிம் இத்தொகுதியில் 11,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அன்வாருக்கு 37,090 வாக்குகளும், தேசிய முன்னணியின் மஸ்லான் இஸ்மாயிலுக்கு 25,369 வாக்குகளும் கிடைத்தன.

இம்முறை மே 7ஆம் தேதி இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.