Home உலகம் பாலி நைன் வழக்கு: குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனை!

பாலி நைன் வழக்கு: குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனை!

601
0
SHARE
Ad

baile-nineஜகார்த்தா, ஏப்ரல் 28 – “ஒரு குற்றத்திற்காக மரண தண்டனை என்பது அருவருக்கத்தக்கது.எங்கள் நாட்டில் மரண தண்டனை இல்லை. வெளிநாடுகளில் அதனை செயல்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம்”  – ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட், இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவிடம் தங்கள் நாட்டு பிரஜைகளுக்காக முன் வைத்த கடைசி நிமிடக் கோரிக்கை. நேற்று  அதுவும் நிராகரிக்கப்பட்டது.

மயூரன் சுகுமாரன் மற்றும் அண்ட்ரு சான் ஆகிய இரு ஆஸ்திரேலியர்களுக்காக மேற்கூறிய கோரிக்கையை பல முறை முன்வைத்துள்ளார் டோனி அபோட்.

கடந்த 2005-ம் ஆண்டு இந்தோனிசியாவிற்குள் ஹெரோயின் கடத்திய குற்றத்திற்காக ‘பாலி நயன்’ (Bali Nine) என்ற கும்பல் கைது செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

அவர்களுக்கு, கடந்த 2006-ம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்படும் முறையிலான மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் மயூரன் சுகுமாரன் மற்றும் அண்ட்ரு சான் ஆகிய இருவரும்.

தொடர்ச்சியான பல கருணை மனுக்கள் காரணமாக தள்ளிப்போடப்பட்டு வந்த வழக்கு, புதிய அதிபர் ஜோக்கோ விடோடோ, பதவி ஏற்றது முதல் சூடு பிடிக்கத் தொடங்கியது.

பாலி நயன் கும்பலுக்கு மரண தண்டனை கிடைப்பதில் தீவிரம் காட்டிய விடோடோ, அபோட், பிரான்ஸ் அதிபர், ஐநா அமைப்புகள் என யார் கூறியும் தனது முடிவில் விடாப்பிடியாக இருந்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பாலி நயன் கும்பலுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான 72 மணி நேர அதிகாரப்பூர்வ கெடு விதிக்கப்பட்டது.

இதற்கிடையே துருக்கியில் நடைபெற்ற மாநாட்டில் விடோடோவை சந்தித்த டோனி அபோட், ஆஸ்திரேலியர்களுக்கு கருணை காட்டும் படி மீண்டும் வலியுறுத்தினார். எனினும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

மயூரன், சான் உட்பட ஒன்பது பேருக்கும் இன்று ஏப்ரல் 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப்பும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.