காபூல், ஏப்ரல் 29 – வடகிழக்கு ஆப்கானில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 52 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கான் – எல்லையில் உள்ள கவான் மாவட்டத்தில் நேற்று காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாக மாநில ஆளுநர் அதீப்மும் தெரிவித்தார்.
இப்போது அந்தப் பகுதிக்கு செல்லும் சாலை, பனிச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிக்கு மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டரில்தான் செல்ல முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம். கடந்த ஆண்டு மே மாதத்தில் இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.