Home இந்தியா ‘தூக்கி அடிச்சிருவேன்’ – பத்திரிக்கையாளரிடம் விஜயகாந்த் ஆவேசம்! (காணொளியுடன்)

‘தூக்கி அடிச்சிருவேன்’ – பத்திரிக்கையாளரிடம் விஜயகாந்த் ஆவேசம்! (காணொளியுடன்)

616
0
SHARE
Ad

vijayakanthசென்னை, ஏப்ரல் 30 – பத்திரிக்கையாளர்களை மிரட்டுவதும், அடிக்கப் பாய்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் விஜயகாந்த், பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் வழக்கம் போல் ஆவேசப்பட்டு பத்திரிக்கையாளரை திட்டிய சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மோடியை சந்தித்த விஜயகாந்த், அதன் பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.

விஜயகாந்த் தலைமையில் அனைவரும் சென்றதால், பத்திரிக்கையாளர்கள் அவரிடம் மோடி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது நிருபர் ஒருவர், விஜயகாந்த்தின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புகள் குறித்து கேள்வி எழுப்ப, ஆத்திரமடைந்த விஜயகாந்த், ‘தூக்கி அடிச்சிருவேன்பாத்துக்க’ என்று கூறி, எழுந்து நின்று அநாகரீகமாக நடந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இருந்தும் பாதியில் எழுந்து சென்றார். பின்னர் அவரை கட்சி உறுப்பினர்கள் சமாதானம் செய்து அழைத்து வந்தனர். தமிழக அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் அவர் இவ்வாறு நடந்து கொண்டது, அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது.

இந்த சம்பவத்திற்கு அனைத்துக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்துக் கட்சிகளையும் ஒரே நாளில் இணைத்து, நற்பெயர் எடுத்த விஜயகாந்த், பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பின் மூலம் தனது பெயரை கேலிக்கூத்தாக்கி உள்ளதாகவும் கூறியுள்ளனர்.