Home கலை உலகம் கார் விபத்து வழக்கு: சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு!

கார் விபத்து வழக்கு: சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு!

572
0
SHARE
Ad

salman3455மும்பை, மே 6 – கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  சல்மான்கானுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆகியுள்ளன என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

விபத்தின் போது சல்மான்கான் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டனை குறித்த வாதம் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சல்மான்கானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2002-ஆம் ஆண்டு சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.