Home இந்தியா சல்மான்கான் வழக்கு: துருப்புச் சீட்டான பக்கத்து வீட்டுக்காரரின் சாட்சியம்!

சல்மான்கான் வழக்கு: துருப்புச் சீட்டான பக்கத்து வீட்டுக்காரரின் சாட்சியம்!

731
0
SHARE
Ad

salman3455மும்பை, மே 7 – குடிபோதையில் சாலையில் படுத்திருந்தவர் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில், 5 வருட சிறை தண்டனை பெற்று இருக்கும் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு, அவரின் பக்கத்து வீட்டுக்காரர் அளித்த சாட்சியமே பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மும்பை, பந்த்ரா பகுதியிலுள்ள சல்மான்கான் வீட்டிற்கு அருகே பல வருடங்களாக வசித்து வரும் பிரான்சிஸ் பெர்ணான்டஸ் (63) என்பவர், கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார்.

அதில் அவர், “சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணியளவில், எனது பூனைக்குட்டி கத்தும் சத்தம் கேட்டு நான் விழித்து எழுந்தேன். பசியில் இருந்த எனது பூனைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தபோது, தெருவில் பெரிய சத்தம் கேட்டது. சம்பவ இடத்திற்கு நான் ஓடிச்சென்று பார்க்கையில், சல்மான்கான் மற்றும் வேறொரு நபரை பொதுமக்கள் அடிக்கப் பாய்ந்து கொண்டிருந்தனர். மேலும் அவர்கள், சல்மான் மீது கற்களைக் கொண்டு தாக்கினர்.”

#TamilSchoolmychoice

“சல்மான் தன்னைக் காக்கும் படி என்னிடம் கெஞ்சினார். நான் எனது மனைவியுடன் சென்று அவரை காரில் ஏற்றி அனுப்பினேன்” என்று கூறியிருந்தார்.

அவரின் சாட்சியத்தை வைத்து நீதிபதி, சல்மான் சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.