Home இந்தியா மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நினைவு அஞ்சலி கூட்டத்தில் கனிமொழி பங்கேற்பு!

மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நினைவு அஞ்சலி கூட்டத்தில் கனிமொழி பங்கேற்பு!

667
0
SHARE
Ad

Jayakanthan-2சென்னை, மே 9 – மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு, தேசிய முரசு வாசகர் வட்டம் சார்பில் நினைவு அஞ்சலி கூட்டம் இன்று நடத்தப்படுகிறது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்குகிறார்.

இந்த கூட்டத்தில், மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர். கலந்துகொண்டு பேசுகிறார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன் நாடாளுமன்ற உறுப்பினர்.

#TamilSchoolmychoice

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கே.சுப்பராயன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயகாந்தனின் நண்பர் குப்புசாமி ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா அனைவரையும் வரவேற்கிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் நடைபெறும் நிகழ்ச்சியில்,

தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்வது புதிய கூட்டணிக்கு அச்சாரமா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.