Home இந்தியா “இனி ஜெயலலிதாவால் நிம்மதியாக உறங்க முடியுமா?” – குஷ்பு கேள்வி!

“இனி ஜெயலலிதாவால் நிம்மதியாக உறங்க முடியுமா?” – குஷ்பு கேள்வி!

516
0
SHARE
Ad

kushboo,சென்னை, மே 11 – சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், நீதித்துறையை கேலிக்கூத்தாக்கிய உங்களால் இனி நிம்மதியாக உறங்க முடியுமா? என நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் வலைத்தளத்தில் அவர் கூறியதாவது:-

“விடுதலை என்ற ஒற்றை வார்த்தை உங்கள் குற்றத்தை போக்கி விடாது. 18 ஆண்டுகளாக நீங்கள் நீதித்துறையை கேலிக்கூத்தாக்கி, தற்போது விடுதலையாகிவிட்டீர்கள். ஆனால், இனி உங்களால் எந்தவொரு குற்ற உணர்வுமின்றி நிம்மதியாக உறங்க முடியுமா?” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice