Home கலை உலகம் ‘மீன்’ என்ற படத்திற்காக வசனகர்த்தாவாக மாறும் கபிலன் வைரமுத்து!

‘மீன்’ என்ற படத்திற்காக வசனகர்த்தாவாக மாறும் கபிலன் வைரமுத்து!

1283
0
SHARE
Ad

kabilan-vairamuthuசென்னை, மே 13 – வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து. எழுத்தாளராக, பாடலாசிரியராக அறியப்பட்ட இவர் ‘மீன்’ என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக வலம்வரவிருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஹரிபாஸ்கர் மீன் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்திற்கான வசனத்தையும், பாடல்களையும் கபிலன்வைரமுத்து எழுதுகிறார்.

சில மாதங்களுக்குப் முன் கபிலன் எழுதிய மெய்நிகரி நாவலை படித்திருக்கிறார் ஹரிபாஸ்கர். அந்நாவல் பிடித்துப் போகவே கபிலனை அணுகியிருக்கிறார் இயக்குநர்.

#TamilSchoolmychoice

கபிலனும் படத்திற்கான விவாதத்திற்கு சம்மதித்திருக்கிறாராம். உதயம் என்.ஹச்.4ல் தொடங்கி அநேகன் படம் வரை பல்வேறு  படங்களுக்கு பாடல்கள் எழுதிவந்தவர் கபிலன்.

தற்பொழுது கெளதம் கார்த்திக் நடிக்கும் இந்திரஜித், பேய்கள் ஜாக்கிரதை, களம் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். மேலும் மீன் படத்திற்கு என்பது வசனகர்த்தாவாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.