Home இந்தியா ஐபிஎல்-8: கொல்கத்தாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது ராஜஸ்தான் அணி!

ஐபிஎல்-8: கொல்கத்தாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது ராஜஸ்தான் அணி!

487
0
SHARE
Ad

rajasthan_650_040515123637மும்பை, மே 18 – ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை அதிரடியாகக் குவித்தது. அந்த அணியின் வீரர் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் சதம் அடித்தார்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை மட்டுமே கொல்கத்தாவால் எடுக்க முடிந்தது. கடினமான இலக்கை தொடும் தூரத்தில் வந்து கொல்கத்தா தோல்வியுற்றது. ஆட்டநாயகனாக ஷேன் வாட்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice