Home உலகம் சீனாவின் ராணுவ பலம் அதிகரிப்பு – ஒபாமா வியப்பு!

சீனாவின் ராணுவ பலம் அதிகரிப்பு – ஒபாமா வியப்பு!

555
0
SHARE
Ad

ceenaநியூயார்க், மே 18 – சீனாவின் ராணுவ பலம் அதிகரித்து வருவது, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்துக்கு சவால் விடுப்பதாக உள்ளது என அமெரிக்க  பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது: “சீனாவில் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் ராணுவத்தை பலப்படுத்தி வருகிறார்.”

“தெற்கு சீன கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய தீவுகளில் விமானப்படை தளங்களை அமைத்து, அந்த பகுதிகள் எல்லாம் தங்கள் வான் எல்லைகளாக சீனா அறிவிக்கிறது”.

#TamilSchoolmychoice

“பெர்சியன் வளைகுடாவில் முதல் முறையாக நீர்மூழ்கி  கப்பல்களை அனுப்பி ரோந்து செல்கிறது. தன்னிடம் உள்ள ஏவுகணைகளை பல குண்டுகளை தாங்கி செல்லும் வகையில் நவீனப்படுத்துகிறது”.

“சீனாவின் இந்த நடவடிக்கை அமெரிக்க அதிகாரிகளை வியப்படைய செய்துள்ளது. அதிபர் ஒபாமா நிர்வாகத்துக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது. இதனால்  பசிபிக் பகுதியில் வான் பாதுகாப்பு கருவிகளை அமெரிக்கா அதிகளவில் அமைத்து வருகிறது”.

“ஆனால், இவையெல்லாம் வடகொரியாவுக்கு எதிரான  நடவடிக்கைதான், சீனாவுக்கு எதிரானது அல்ல என அமெரிக்கா கூறிவருகிறது. அதேநேரத்தில் அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளை சீனா  அச்சுறுத்தும் முயற்சிகளை தடுக்கும் வழி பற்றியும் அதிபர் ஒபாமா ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்” என அதில் கூறப்பட்டுள்ளது.