Home கலை உலகம் இயக்குநர் பாண்டிராஜ் மீது டி.ராஜேந்தர் புகார்!

இயக்குநர் பாண்டிராஜ் மீது டி.ராஜேந்தர் புகார்!

629
0
SHARE
Ad

director Pandiraj,சென்னை, மே 21 – சிம்பு, நயன்தாராவை ஜோடியாக வைத்து ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை பாண்டிராஜ் இயக்கினார். இப்படத்துக்கு சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைத்தார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. ஒரு பாடல் காட்சியும் சில வசன காட்சிகளும் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. படம் முடிவடையாத நிலையில் படப்பிடிப்பு திடீரென தள்ளி வைக்கப்பட்டது.

குறளரசன் படத்துக்கான பாடலை இன்னும் தயாரிக்க செய்யவில்லை என்றும், படப்பிடிப்புக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

இதனாலேயே படம் தாமதமாவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பாண்டியராஜ் ‘ஹைக்கூ’ என்ற படத்தை இயக்க சென்று விட்டாராம். இந்த படத்தை சூர்யா தயாரிக்கிறார். அத்துடன் கவுரவ தோற்றத்திலும் இந்த படத்தில் சூரியா தோன்றுகிறார். இப்படம் குழந்தைகள் படமாக தயாராகிறது.

இந்த நிலையில் பாண்டிராஜ் ‘இது நம்ம ஆளு’ படத்தை முடித்து கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து பாண்டிராஜிடம் கேட்டபோது,

“இது நம்ம ஆளு படத்துக்கு தேவையான முக்கிய பாடலை குறளரசனும் படப்படிப்புக்கு தேவையான பணத்தை டி.ராஜேந்திரும் தயாராக வைத்து இருந்தால், ‘இது நம்ம ஆளு’ படத்தை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றார்.