Home உலகம் ஆசியாவில் 110 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஜப்பான்!

ஆசியாவில் 110 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஜப்பான்!

467
0
SHARE
Ad

japanடோக்கியோ, மே 23 – ஆசியாவின் கட்டமைப்புகளுக்காக சுமார் 110 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஜப்பான் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டோக்கியோவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அபே, “ஜப்பான் அரசாங்கமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் இணைந்து ஆசியாவில் பெரும் முதலீடுகளை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அடுத்த 5 ஆண்டுகளில் பொது மற்றும் தனியார் பிரிவுகளில் இந்த முதலீடுகள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.”

“பலதரப்பட்ட முதலீடுகள் மூலம் ஆசியாவில் பெரிய மாற்றங்களை நம்மால் சாதிக்க முடியும். என்னைப் பொருத்தவரையில் ஆசியாவில் தரமான மற்றும் புதுமையான உள்கட்டமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க விரும்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஜப்பான் அரசாங்கம் இந்த புதிய முதலீடுகள் குறித்து திடீரென அறிவிக்க மிக முக்கியமான காரணம், சீனாவின் தலைமையில் இந்தியா உட்பட 50 நாடுகள் இணைந்து உருவாக்கி இருக்கும் ‘ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி’ ( Asian Infrastructure Investment Bank) தான். இந்த வங்கியின் மூலம் சீனாவும், இந்தியாவும் தங்களை ஆசிய அளவில் முன்னிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளன.

மேலும், இந்த வங்கியின் மூலம் 50 ஆசிய நாடுகள் இணைந்து சுமார் 100 பில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்டி உள்ளன. அப்படி திரட்டப்படும் நிதி, ஆசியாவின் உள்கட்டமைப்புகளுக்கு பயன்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தலைமையில் இயங்க விரும்பாத ஜப்பான், தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.