Home நாடு பெர்லிஸ் புதை குழிகள் விசாரணையில் பாகுபாடே கிடையாது!

பெர்லிஸ் புதை குழிகள் விசாரணையில் பாகுபாடே கிடையாது!

591
0
SHARE
Ad

savamகோலாலம்பூர்,மே 27- பெர்லிஸில் கண்டறியப்பட்ட புதைகுழிகள் பற்றி விசாரணை நடத்துவதில் அரசாங்கம் எந்தவொரு சாராருக்கும் ஆதரவோ பாரபட்சமோ காட்டாது என்று பிரதமர் துறை அமைச்சர்  டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம் தெரிவித்துள்ளார்.

பெர்லிஸ் புதைகுழி குற்றப் பின்னணியில் எவர் இருந்தாலும் அவர் மீது சட்ட நடவடிக்கை  பாயும். அரசு அலுவலர்கள் இதில் ஈடுபட்டிருந்தால் கூட அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.

“சம்பந்தப்பட்ட பகுதி ஒரு மாநில பூங்காப் பகுதி. வனத் துறையினரும் வனப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி வளைய வரும் பகுதியாகும்.அப்படி இருக்கையில் எப்படி அவர்களால் இப்படிப்பட்ட புதைகுழிகளை அடையாளம் காண முடியாமல் போனது எனபதுதான் வியப்பாக உள்ளது.ஆனாலும்,எவரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை.தீர விசாரிக்காமல் யார் மீதும் பழி போடுவது பாவம்”எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இவ்வளவு பெரிய மாபாபத்தைச் செய்தவர்கள் யார்?அவர்களுக்குத் துணை போனவர்கள் யார்? என்கிற விவரங்கள் விரைவில் வெளிவரும் என நம்புவோம்.